'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து வந்து பின்னர் தனுஷ் தமிழ் தெலுங்கில் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் வெளிச்சம் பெற்றவர் நடிகை சம்யுக்தா மேனன். தனது பெயரில் உள்ள மேனன் என்கிற சாதி அடையாளத்தை குறிக்கும் வார்த்தையை நீக்கிவிட்டு சம்யுக்தா என்றே தன்னை அழைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். ராமநவமி நாளன்று ஆதிசக்தி என்கிற ஒரு புது அமைப்பை உருவாக்கியுள்ளார் சமயுக்தா.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் சம்யுக்தா கூறும்போது, “நாம் ராமநவமி மற்றும் தாரநவமியின் தெய்வீக சங்கமத்தை ஆழ்ந்த நன்றியுடன் தழுவிக்கொண்டிருக்கும் வேளையில், பெண்களின் உயர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித முயற்சியான 'ஆதிசக்தி'யின் பிறப்பை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த முயற்சிக்கு உங்கள் தெய்வீக ஆதரவும் ஆசீர்வாதமும் மிகுதியாக அமையட்டும்.. இந்த புனித பயணம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் பகிரப்படும்” என்று கூறியுள்ளார்.