மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி அண்மையில் மெட்ரோ பணியின் காரணமாக ஒரு சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக சைத்ராவுக்கு எதுவும் ஆகவில்லை. கார் மட்டும் சேதமாகி உள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் காரின் புகைப்படங்களை வெளியிட்டு மெட்ரோ பணியாளர்களின் அலட்சியத்தை அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் 'போரூர் மேம்பாலத்தின் அடியில் எனது கார் நிற்கும் போது மெட்ரோ பணிகளுக்காக போடப்படும் சிமெண்ட் கலவை கார் மேல் விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. இது அந்த இடத்தில் செல்லும் பைக்கிலோ அல்லது நடந்தோ செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். சிலரின் அஜாக்ரதையால் பல உயிர்களை நாம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும் நான் அதிகாரிகளிடம் கேட்டுகொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததார்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.