நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ரத்னம் படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. அதில், நாட்டில் 60 சதவீத பேர் கெட்டவர்கள், 40 சதவீதம் பேர் நல்லவர்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற ஒருவன் வீறு கொண்டு எழுகிறான். அவன்தான் ரத்னம். சினிமாவில் மட்டுமே இது போன்ற சூப்பர் ஹீரோக்களை பார்க்க முடியும். நல்லவர்களின் வலியை போக்கும் ஒருவன் தான் ஹீரோவாக உருவாக முடியும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டரில் தான் ரத்னம் படத்தில் விஷால் நடித்துள்ளார். சாமி, சிங்கம் படங்களை விட இந்த படத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஹரி.