பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களைக் தயாரித்து வருகிறார். கடந்தாண்டு முதல் முறையாக தமிழில் நடிகர் விஜய்யை வைத்து 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்தார். தற்போது விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‛தி பேமிலி ஸ்டார்' என்ற படத்தை எடுத்துள்ளார். நாளை தெலுங்கு மற்றும் தமிழில் இந்தப்படம் வெளியாகிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் படத்தை எடுக்க எண்ணி உள்ளார் தில் ராஜூ. இதில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.