அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
2024ம் ஆண்டின் மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. முக்கியப் படங்கள் எதுவும் இல்லாமல் கடந்த மாதமும் கடந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திலாவது தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தரக் கூடிய படங்கள் ஏதாவது வராதா என பலரும் காத்திருக்கிறார்கள்.
இருப்பினும் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழனன்று ஏப்ரல் 4ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'கள்வன்' படம் வருகிறது. அதற்கடுத்த தினமான வெள்ளியன்று ஏப்ரல் 5ம் தேதி “டபுள் டக்கர், ஆலகாலம், இரவின் கண்கள், கற்பு பூமியில், ஒரு தவறு செய்தால், வல்லவன் வகுத்ததடா, ஒயிட் ரோஸ்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
கடந்த வாரம் மார்ச் 29ம் தேதி கூட ஏழு படங்கள் வெளியாகின. அவற்றில் எந்த ஒரு படத்திற்கும் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. சில படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தகவலும் வந்துள்ளது.
ஐபிஎல், தேர்தல், தேர்வு ஆகியவற்றுடன் சேர்த்து இப்போது வெயிலும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த இன்னல் காரணமாகவும் மக்கள் பகலில் கூட அதிகம் வெளிவருவதைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியலும் வாரம் இத்தனை படங்கள் வெளியாகிறது. இவற்றில் எது ஓடும் என்பது கூட மாபெரும் கேள்வியாகவே தொடர்கிறது.