அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் |
கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் 'அஞ்சான்'. லிங்குசாமி இயக்கியிருந்தார் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இந்த நிலையில் படத்தை மறு வெளியீடு செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் முன்பு செய்த தவறுகளை சரி செய்து இயக்குனர் லிங்குசாமி புதிய திரைக்கதைக்கு ஏற்றவாறு காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் எடிட் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும், நண்பர்களிடம் அதை போட்டு காண்பித்து அவர்களுக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் படத்தை வெளியிடுவார் என்று தெரிகிறது.