நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அதேபோல வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா பற்றியும் படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் அடுத்த கட்ட தலைவர்கள் பற்றிய படம் தயாராகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழினி ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து 'செஞ்சமர்' என்ற படம் தயாராகிறது. இதில் ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா, சாக்ஷி அகர்வால், மைம் கோபி, ரஞ்சன், கீர்த்தனா, விஷ்வா, சதீஷ், சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர். சி.ஜி.எம்.பிக்சர்ஸ் சார்பில் மணிவண்ணன் தயாரிக்கிறார்.
அதிரை தமீம் அன்சாரி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது ''இலங்கையில் இறுதிப்போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் என்ன ஆனார்கள்? திரும்பி வருவார்களா? என்ற ஆய்வை செய்ய இலங்கைக்கு ஐ.நா. போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு படம் தொடங்குகிறது. குறிப்பாக பிரிகேடியர் பால்ராஜ், தமிழினி பற்றியும் படம் பேசுகிறது.
இறுதி போருக்கு முன்னால் தமிழ் மக்கள் மற்றும் விடுதலை போராளிகளின் வாழ்வியல் எப்படி இருந்தது? என்பதையும் படம் அலசும். இந்த படம் இலங்கை தமிழர் வாழ்வுரிமை போராட்டத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்'' என்றார்.