ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சமீபகாலமாக ரொம்பவே கிசுகிசுக்கப்பட்டு வந்த ஜோடி என்றால் அது சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி ஜோடி தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வெளிநாட்டிலோ அல்லது வட மாநிலங்களுக்கோ இருவரும் ஒன்றாக சென்றாலும் கூட அது குறித்த புகைப்படங்கள் வெளியாகாத அளவிற்கு ரகசியமாக தங்களது சந்திப்பை இருவரும் நடத்தினார்கள். அதன் பிறகு சமீப காலங்களில் ஜோடியாகவே நிகழ்ச்சிக்கு வருகை தர ஆரம்பித்தனர்.
இவர்களுக்குள் கிட்டத்தட்ட காதல் இருப்பது உண்மைதான் என ரசிகர்கள் யூகித்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்த மோதிரங்கள் அணிந்தபடி இருவரும் ஜோடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பலரும் இவர்களது காதலுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் நடிகை நயன்தாரா இவர்கள் இருவரையும், “வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டு சோசியல் மீடியா மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நயன்தாராவும் சித்தார்த்தும் சமீப நாட்களாக டெஸ்ட் என்கிற படத்தில் இணைந்து நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.