புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' |
இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அதே போல இளம் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான வீரராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இருந்தாலும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் கடந்த பல வருடங்களாக அவர் இருப்பதால் அவர் மீதும் சென்னை ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு அபிமானம் உண்டு.
சென்னை அணி, அதனுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா, அனிருத் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'வாட் இஸ் குக்கிங்' எனக் கேட்டுள்ளது. சென்னை அணிக்கான சிறப்புப் பாடலுக்கான படப்பிடிப்பா அல்லது வேறு ஏதாவது படப்பிடிப்புக்கான புகைப்படமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.
'ஜவான்' படத்திற்குப் பிறகு ஹிந்தி ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பான் இந்தியா பிரபலமாகிவிட்டார் அனிருத். சென்னை அணிக்கான பாடலாக இருந்தாலும் அது பான் இந்தியா பாடலாக பிரபலமாகும் என்பது உறுதி.