ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த நான்கு வருடங்களாகத் தயாரிப்பில் உள்ள இப்படம் எப்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் என்பதே இத் தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமை மட்டும்தானாம். ஹிந்தி உரிமையையும் சேர்த்தால் அது 150 கோடியைத் தொடும் என்கிறார்கள். மேலும், படத்தின் சாட்டிலைட் உரிமைகளையும் சேர்த்தால் படத்திற்காகப் போட்ட பட்ஜெட்டை இவற்றிலேயே மீட்டுவிடுவார்களாம்.
தியேட்டர் வியாபாரம், அதற்கான வசூல் மற்றவர்களுக்கான வருமானம். ஓடிடி, சாட்டிலைட்டில் மட்டுமே போட்ட முதலீட்டை 'டேபிள் பிராபிட்' ஆக எடுத்து விடுவதால்தான் இத்தனை வருட தாமதத்திற்கும் தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தப்படவேயில்லை என்கிறார்கள்.