தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருப்பவர் ராம் சரண். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் ஆஸ்கர் வரையிலும் புகழ் பெற்றவர். தற்போது ஷங்கர் இயக்கத்தில், 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தை அடுத்து ராம் சரண் நடிக்க உள்ள அவரது 16வது படத்தின் பூஜை இன்று(மார்ச் 20) ஐதராபாத்தில் நடைபெற்றது. 'உப்பென்னா' படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இப்படத்தை இயக்க, ஏஆர் ரஹ்மான் இசையைமைக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்று நடைபெற்ற பூஜையில் ஏஆர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பித்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற 'ஆடுஜீவிதம்' பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அடுத்து இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவுக்காக கமல்ஹாசன் நடத்திய பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார். இன்று காலை ஐதராபாத்தில் நடந்த பட பூஜையிலும் கலந்து கொண்டுள்ளார்.
சுமார் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் இசையமைக்கிறார் ஏஆர் ரஹ்மான்.




