Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி!

19 மார், 2024 - 04:59 IST
எழுத்தின் அளவு:
Jayam-Ravis-Genie-is-nearing-the-final-stage!


தற்போது பிரதர், ஜீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் அர்ஜுனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜீனி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ரயிலில் அமைக்கப்பட்ட செட்டில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்ததும், மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஜீனி படத்தை ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர்ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த ... கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)