லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛கா'. இதில் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியதாவது: படத்தின் இயக்குனர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும், இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது.
சில இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த நடிகைக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைத்துவிடுவார்கள். ஆனால் நாஞ்சில் அப்படி இல்லை. இந்தப் படத்துக்கு ஆண்ட்ரியாதான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.
எனக்கு காடு என்றால் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை கோயிலை விட காடு தான் கடவுள், இயற்கை தான் கடவுள். அந்த வகையில் இப்படம் எனக்கு ஸ்பெஷலான படம். இவ்வாறு அவர் பேசினார்.