'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியான படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'.
இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் முதன் முதலில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்தது. அதன்பின் உலக அளவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்தது. சுமார் 180 கோடி வசூலை நெருங்கிவிட்டதாகத் தகவல்.
அதற்கடுத்து தற்போது தமிழகத்தில் 50 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்ற புதிய சாதனையைப் புரிந்துள்ளது. இந்த 2024ம் ஆண்டு பிறந்து 75 நாட்கள் கடந்துள்ள நிலையில் தமிழில் வெளிவந்த படங்களில் 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய படங்கள் மட்டுமே 75 கோடி வசூலைக் கடந்தது. ஆனால், அப்படங்கள் லாபத்தைத் தரவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் தமிழக உரிமையாக சில கோடிகளில் மட்டுமே வாங்கப்பட்ட இந்தப் படம் பெரும் லாபத்தைக் கொடுத்து தமிழ் சினிமா தியேட்டர்களை சிரமத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. இப்படம் விரைவில் 200 கோடி வசூலைக் கடக்கும் முதல் மலையாளப் படம் என்ற பெருமையையும் பெற வாய்ப்பிருக்கிறது.