ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்து வரும் படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அஜித்திற்கு நடந்த அறுவை சிகிச்சை காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அடுத்த வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் வலிமை, துணிவு படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அப்படம் குறித்து அப்டேட்களை வெளியிடாமல் அஜித் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து வந்தார்கள். அதேபோன்று தற்போது விடாமுயற்சி படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வருவதால் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு சோசியல் மீடியாவில் அப்பட நிறுவனத்தை துரத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் படக்குழுதரப்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் கொளுத்திப்போட்ட வதந்தி தானா? இல்லை உண்மையான செய்தியா? என்பதை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருப்போம்.