அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அளவிற்கு சந்தேகமே இல்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகை ஆகிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் அழகான ஜோடி என்று பேசப்பட்டதுடன் இவர்கள் இருவருக்கும் இடையே இருப்பது நட்பா, அதையும் தாண்டி காதலா என்கிற விவாதம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் ஓய்ந்த பாடில்லை. அதேசமயம் தாங்கள் இருவரும் நட்பாக மட்டுமே பழகி வருவதாக இருவரும் அவ்வப்போது கூறி வருகிறார்கள்.
அதே சமயம் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இவர்கள் ஏதேனும் விசேஷங்களிலோ அல்லது வெளிநாட்டு பயணங்களுக்கோ தனித்தனியாக சென்றாலும் கூட அவர்கள் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலமாக இருவரும் ஒன்றாகத்தான் சென்றுள்ளார்கள் என்பது போன்று ரசிகர்கள் ஒப்பீடு செய்ய துவங்கி விட்டார்கள். கொஞ்ச நாட்களாக இதுபோன்ற பரபரப்பு அடங்கி இருந்த நிலையில் தற்போது ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மீண்டும் இது குறித்த விவாதத்தை துவங்கி வைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள இளஞ்சிவப்பு நிற குல்லா போன்றே கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவும் அணிந்திருந்தார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. இந்த இரண்டையும் ஒப்பிட்டு ராஷ்மிகா அணிந்திருப்பது விஜய் தேவரகொண்டாவின் குல்லா தான் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.