பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மலையாளத் திரைப்படம் ஒன்று தமிழகத்திலும், அமெரிக்காவிலும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம்தான் அது என்பதை ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இதுவரையில் எந்த ஒரு மலையாளப் படத்திற்கும் ஓபனிங்கிலேயே இப்படி ஒரு வரவேற்பு தமிழகத்தில் கிடைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது போலவே அமெரிக்காவிலும் மலையாளத் திரையுலக வரலாற்றில் முதல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
அங்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகால மலையாள சினிமா வரலாற்றில் ஒரு மலையாளப் படம் 1 மில்லியன் டாலர் சாதனையைப் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல. மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்கள் கூட அப்படிப்பட்ட சாதனையைப் புரியவில்லை. இளம் கலைஞர்கள் பங்கு பெற்ற ஒரு படம் புரிந்திருக்கிறது.
கடந்த வாரம் 100 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் தற்போது 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.