மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரிஷ்யம் படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியாக மாறியவர்கள் மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷ்யம் 2, டுவல்த் மேன், கடந்த வருட இறுதியில் வெளியான 'நேர்' என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். அதேசமயம் கடந்த 2020ல் அதாவது கொரோனா முதல் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக இவர்களது கூட்டணியில் ராம் என்கிற படம் துவங்கியது. இதில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார்.
வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது கொரோனா தாக்கம் ஆரம்பித்ததால் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிறுத்தி விட்டனர். அதன் பிறகு கொரோனா இரண்டாவது அலை முடிந்த சமயத்தில் மீண்டும் ராம் படத்தை தூங்குவதில் நடைமுறை சிரமங்கள் நிறைய இருந்ததால் அதன்பிறகு ஜீத்து ஜோசப் வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் ராம் படத்தை மீண்டும் எப்போது துவங்குவீர்கள் என சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் திட்டமிடப்பட்டிருந்தது.. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்தபோதே இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவருக்கு காயம் ஏற்பட்டு அதனால் சில நாட்கள் தாமதமானது. அடுத்து கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக இந்த படத்தை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. மீண்டும் இப்போது படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் வெவ்வேறு நாடுகளில் திட்டமிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை அங்கே நிலவும் கால நிலைக்கு ஏற்றபடி தான் நடத்த வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் ஏற்கனவே எடுத்த காட்சிகளும் வீணாகிவிடும்.
அதுமட்டுமல்ல இதற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை மீண்டும் வெளிநாட்டு படப்பிடிப்பில் ஒன்றிணைப்பதிலும் சிரமம் இருக்கிறது. இத்தனை வருடங்கள் தாமதமான ஒரு படத்தை விட்ட இடத்தில் இருந்து மீண்டும் துவங்குவதற்கு ஒரு தயாரிப்பாளருக்கு நிறைய நடைமுறை சிரமங்களும் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையெல்லாம் சரி செய்து இந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. நிச்சயம் ராம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.