மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள கார்டியன் என்ற ஹாரர் படம் நாளை(மார்ச் 7) வெளியாகிறது. இதனை 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கிய சபரிகுரு - சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இயக்குனர் விஜய்சந்தர், தனது பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுரேஷ் மேனன், சுமன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ஹன்சிகா கூறும்போது, “அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளேன். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. இதில் பேய் கேரக்டரிலும் நடித்துள்ளேன். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன். பேய் கேரக்டருக்காக, கண்களில் விதவிதமான லென்ஸ் பயன்படுத்தி நடித்தேன். அப்படி நடித்துவிட்டுப் பார்த்தால் அரைமணி நேரம் கண்ணே தெரியாது.
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் கல்லறை தோட்டத்தில் எடுக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு மேல் அந்தக் காட்சியை எடுத்தார்கள். அந்தரத்தில் தொங்கி பேயாகக் கத்தியபடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். அது சவாலாக இருந்தது. அந்த நேரத்தில், மேக்கப் போட்ட என் முகத்தைப் பார்க்க எனக்கே பயமாக இருந்தது” என்கிறார் ஹன்சிகா.