அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், ‛‛பெர்லினாலேயில் எங்கள் கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி. மேலும், நம்ப முடியாத சில பதில் எங்கள் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை பதித்துள்ளது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.