வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பிரபல செய்தி டிவி நிறுவனம் ஒன்று 'வாட் இந்தியா தின்க்ஸ் டுடே' என்ற மாநாடு நிகழ்ச்சி ஒன்றை டில்லியில் மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. அதில், 'பெண் கதாநாயகிகள் - த நியூ ஹீரோ' என்ற விவாதத்தில் கலந்து கொண்டு நடிகையும், அரசியல்வாதியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'அனிமல்' படம் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“அனிமல்' படத்தை நான் பார்க்கவில்லை. காரணம், அது எனக்கான படம் அல்ல. 'அனிமல்' போன்ற ஒரு படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்யும் ஒரு படமாகத் தொடர்கிறது என்றால், இது போன்ற படங்களைப் பார்க்கும் மக்களின் மனநிலையைப் பற்றி உண்மையில் நாம் சிந்திக்க வேண்டும். அதற்கு முன்பே 'கபீர் சிங்' படத்துடன் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்னை இருந்தது. நான் இயக்குனரை குறை கூறவில்லை. அவருக்கு இது வெற்றி என்று நான் நினைக்கிறேன்.
இந்த மன்றத்தில் பாலின சமத்துவம் பற்றி பேசுவது, பெண்களுக்கு சமமான மரியாதைப் பற்றிப் பேசுவது, அவர்களுடைய கண்ணியம் பற்றிப் பேசுவது, அவர்கள் எப்படி முன்னிறுத்தப்பட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறோம். ஆனால், நீங்கள் இன்னும் 'அனிமல்' போன்ற ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள். இது போன்ற படங்களைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் அனைவரும் இளம் வயதினர். அவர்கள் படித்த இளவயதினர். “ஓ… நாங்கள் படத்தை நேசிக்கிறோம்” என்கிறார்கள். ஆனால், நான், “உங்கள் மனதில் என்ன இருக்கிறது,” எனக் கேட்கிறேன்.
எனது மகள்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பார்த்தார்கள். பார்த்துவிட்டு வந்து, “அம்மா, இந்தப் படத்தைப் பார்க்காதே,” என்றார்கள். அவர்கள் பார்த்தது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது. அவர்களது யோசிக்கும் எண்ணம் மாற வேண்டும்,” என்று பேசியுள்ளார்.
'அனிமல்' படம் உலகம் முழுவதும் 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படத்தைப் பற்றி நடிகை ராதிகாவும் ஏற்கெனவே கடுமையாக விமர்சித்திருந்தார்.