லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவரை அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் கவுதம் மேனன். இந்த நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி பிப்ரவரி 26ம் தேதியான இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனால், சமந்தா திரையுலகிற்கு வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கிறார், அதில், 14 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு(சமந்தா) நிறைய ஆற்றல் கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு, நன்றி என் அழகியே என பதில் கொடுத்திருக்கிறார் சமந்தா.