Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராயன், என் இதயத்திற்கு நெருக்கமான படம் - காளிதாஸ் ஜெயராம்

20 பிப், 2024 - 05:12 IST
எழுத்தின் அளவு:
Raayan,-a-film-close-to-my-heart---Kalidas-Jayaram


நட்சத்திரத் தம்பதியினரான ஜெயராம் - பார்வதியின் மகன் காளிதாஸ் ஜெயராம். இரண்டு மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதில் “என்டே வீடு அப்புவின்டேயும்', என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றவர் காளிதாஸ்.

தமிழில் 'ஒரு பக்கக் கதை' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வெளிவர மிகவும் தாமதமானது. அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தாலும் இன்னும் முக்கிய வெற்றியைப் பெறாமல் இருக்கிறார். 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் மகனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

தனுஷின் 50வது படமான 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் காளிதாஸ். நேற்று வெளியான படத்தின் முதல் பார்வையிலும் அவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதைப் பகிர்ந்து, “காத்திருப்பு கடைசியாக முடிவுக்கு வந்தது. எனது இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம் குறித்து உங்களுக்குப் பகிர்வது எனக்கு உற்சாகமாக உள்ளது. தனுஷ் சாரின் 50வது படமான, அவரே இயக்கும் 'ராயன்' படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது திறமையின் அபிமானியாக இருந்து அவருடன் நடிக்கிறேன். கனவு நனவானது. ராயன் உலகத்தில் குதிப்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், நித்யா மேனன், அபர்ணா பாலமுரளி, அனிகா சுரேந்திரன், செல்வராகவன், வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துணிவு பட வில்லன் ரித்து ராஜ் சிங் காலமானார்!துணிவு பட வில்லன் ரித்து ராஜ் சிங் ... அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: திரிஷா உறுதி அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)