நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
காமெடி நடிகரான அப்புகுட்டி, 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 'வாழ்க விவசாயி' படத்தில் கதையின் நாயகனாக நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் படம் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'.
இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா தயாரிக்கிறார்கள். 'வெடிகேட்டு' உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். கிராமத்து ஏழை தம்பதிகளின் வாழ்வியலைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.