மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படம் தற்காலிகமாக 'DNS' என அழைக்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக ஐதராபாத்தில் தொடங்கி பின்பு திருப்பதியில் நடைபெற்றது. மூன்றாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. இதில் தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது கோவாவில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கும் என கூறப்படுகிறது.