லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்த படம் மகான். அவர்களுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில், தற்போது விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் மகான்-2 என்று கேள்விக்குறியோடு பதிவிட்டு ஒரு போஸ்டர் வெளியிட்டிருக்கிறார். இது, அடுத்து மகான்- 2 திரைப்படம் உருவாகப் போகிறது. அதனால் தான் விக்ரம் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என்ற யூகங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஏற்கனவே விக்ரம் நடித்த சாமி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.