சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை |
'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆக்ரோஷமான குத்துச் சண்டை வீரராக நடித்தார் ஆர்யா. அந்தப் படத்திற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து தன்னை 'ஆஜானுபாகுவான ஆர்யா'வாக மாற்றிக் கொண்டார். அவரது ஈடுபாட்டைப் பலரும் பாராட்டினார்கள். அடுத்து 'சார்பட்டா பரம்பரை 2' படத்திலும் நடிக்க உள்ளார்.
தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமானது. விஷ்ணு விஷால் நடித்த 'எப்ஐஆர்' படத்தை இயக்கியவர்தான் மனு ஆனந்த்.
ஆர்யா அவரது எக்ஸ் தளத்தில் 'மிஸ்டர் எக்ஸ்' படக்குழுவினரை டேக் செய்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் விதத்தில் ஆர்யாவின் உடம்பில் அத்தனை 'பேக்'குகள் தெரிகிறது.
“மிஸ்டர் எக்ஸ்' படத்திற்கான அறிமுகக் காட்சிக்குத் தயார். சீக்கிரம் ஆரம்பியுங்கள் பிரதர் மனு ஆனந்த். முதல் பார்வை டீசர் விரைவில்... பிரதர் கவுதம் கார்த்திக் ஏற்கெனவே இந்தப் படத்தில் அசத்தி வருகிறார். சரத்குமார் சார் உண்மையான மகா மனிதர். மஞ்சு வாரியர் மிஸ்டர் எக்ஸ் படத்தின் இரும்புப் பெண்,” என ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யா தயாராவதைப் பார்த்தால் படத்தின் அறிமுகக் காட்சி ஆணழகன் போட்டியாக இருக்குமோ ?.