300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழ், தெலுங்கு என பத்து வருடங்களுக்கு மிகவும் பிஸியான நம்பர் 1 நடிகையாகவும் இருந்தவர் த்ரிஷா. அதன்பின் அவரது பிரபலம் கொஞ்சம் குறைந்தது. தெலுங்குப் படங்களில் நடிக்காமல் அல்லது வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் 2018ல் வெளிவந்த '96' படம் அவருக்கு அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தது. 'பொன்னியின் செல்வன்' படத்திலும் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைத்தார் த்ரிஷா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஜோடியாக கடந்த வருடம் வெளிவந்த 'லியோ' படத்தில் நடித்தார். அது போல, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படத்திலும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ள 'விஷ்வம்பரா' படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரிஷாவை வரவேற்று சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து த்ரிஷா, “18 வருடங்களுக்குப் பிறகு 'ஒன் அன்ட் ஒன்லி' மெகாஸ்டாருடன் மீண்டும் இணைவது பெருமை. உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி சிரு சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஜோடியாக 15 வருடங்களுக்குப் பிறகு 'லியோ'' படத்தில் நடித்த த்ரிஷா, அதையும் தாண்டி 18 வருட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார்.