வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இந்தியத் திரையுலகத்தின் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் இயக்குனர், நடிகர் கே பாக்யராஜ். அவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்க முயன்று வருகிறார்.
2008ல் வெளிவந்த 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் சில பல படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டு அவர் கதாநாயகனாக நடித்த 'ராவண கோட்டம்' படம் வெளிவந்தது.
இன்று அவர் நடித்துள்ள 'ப்ளூ ஸ்டார்' படம் வெளியாகிறது. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார் சாந்தனு. இன்று படம் வெளியாவதைக் குறித்து, “சக்கரகட்டி'யில் இருந்து 'ப்ளூ ஸ்டார்' வரையிலான எனது பயணம், எனக்குப் பல பாடங்களை, உணர்வுகளின் ஏற்றத் தாழ்வுகளை, மறக்க முடியாத நினைவுகள் என கற்றுத் தந்த ஒரு பயணம். அதற்காக எனது நன்றி. இப்போது முதல் பாசிட்டிவிட்டி மட்டுமே. உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம் தான் ப்ளூ ஸ்டார். இன்று முதல் உலகமெங்கும், போய் பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கும், ஜெய்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.