'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஒரே நாளில் வெளியாகும் படக்குழுவினருக்கு இடையே போட்டி என்பது வழக்கமாக இருக்கும். நேரடியாக ஒருவரை மற்றவர் கமெண்ட் செய்ய மாட்டார்கள் என்றாலும் மற்ற படம் சரியில்லை என்றால் 'அப்பாடா, நம்ம படம் தப்பிச்சது,' என்று ஆனந்தமடைவார்கள். இதுதான் சினிமாவில் காலம் காலமாகக் கேட்கப்படும் டயலாக்.
ஆனால், நாளை ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள 'ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்' படக்குழுவினர் ஒரே நாளில் மோதிக் கொண்டாலும் பிரண்ட்லியாக உள்ளனர்.
'ப்ளூ ஸ்டார்' படக்குழுவைச் சேர்ந்த தயாரிப்பாளர் பா ரஞ்சித், அதன் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, பிருத்விராஜ் மற்றும் 'சிங்கப்பூர் சலூன்' படக்குழுவைச் சேர்ந்த ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நேற்று இரவு 'பிரண்ட்லி மேட்ச்' ஆக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைவிட நாளைய போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை இரண்டு படக்குழுவுமே ஆரோக்கியமாகவே எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.