நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
கடந்த 2022ம் ஆண்டு லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் லெஜெண்ட். ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ஊர்வசி ரவுட்டேலா, பிரபு, விவேக், யோகி பாபு, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்த சரவணன், தற்போது சோசியல் மீடியாவில் தனது அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.