ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பொதுவாக சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகர்கள் விதவிதமான விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டுவார்கள். அப்படி விலை உயர்ந்த கார்களை தங்களிடம் வைத்திருப்பது தங்களது கவுரவத்தின் அடையாளமாகவே கருதுவார்கள். நடிகர்களுடன் ஒப்பிடும்போது பிரபல முன்னணி இயக்குனர்கள் அந்த அளவிற்கு பெரிய அளவில் தங்களை நான் கார் பிரியர்களாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஷங்கர் உட்பட ஒரு சிலரை தவிர பெரும்பாலும் இயக்குனர்கள் விலை உயர்ந்த கார்களில் பவனி வருவதையும் பார்த்திருக்க முடியாது.
இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் 1.30 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 என்கிற விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். இந்த காரின் முன்பாக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.