'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான நபர்களில் பூர்ணிமாவும் ஒருவர். இந்த சீசனில் மாயாவிற்கு அடுத்தபடியாக நேயர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபரும் பூர்ணிமா தான். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி பல விமர்சனங்கள் வருவதை பார்த்த பூர்ணிமா தனது ஹேட்டர்ஸ்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் மீது அன்பை பொழிந்ததற்கும், என் குறைகளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. என்னுடைய ரசிகர்கள் என்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் ஒருவரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட பதிலுக்கு வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் காதலியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.