பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், அகிலன் என்ற இரண்டு படங்களுமே அவருக்கு தோல்வியை கொடுத்து விட்டன. அதையடுத்து அவரது நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் சைரன் படத்தை கடந்த மாதம் கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அப்போது பிரபாஸின் சலார் படம் வெளியானதால் சைரன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள்.
இந்த நிலையில், தற்போது சைரன் படத்தை வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று 'ஜி5' ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இதற்கு முன்பு ஜெயம்ரவி நடித்த 25வது படமான 'பூமி' படத்தையும் ஓடிடி தளத்தில்தான் நேரடியாக வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சைரன் படத்தை அடுத்து தக்லைப், காதலிக்க நேரமில்லை, பிரதர், தனி ஒருவன்- 2 என பல படங்களில் ஜெயம் ரவி பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.