மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் |

மணிரத்னம் இயக்கிய இருவர், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து மணிரத்னம் இயக்கும் 'தக்லைப்' படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் கமலுடன், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஐஸ்வர்யா ராயின் பெயரும் அறிவிக்கப்பட உள்ளது. அப்படி இந்த படத்தில் அவர் இணைந்தால் கமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும். மேலும், இந்த படத்தில் ஏற்கனவே கமிட்டாகியுள்ள திரிஷா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.