மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் திரையுலகின் ஒப்பற்ற நடிகரும் அரசியலில் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவருமான நடிகர் விஜயகாந்த் நேற்று காலமானார். கடந்த பல வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு பலமுறை சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் நேற்று அவர் காலமானார்.
திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், விஜயகாந்த் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, அவர் கொல்லப்பட்டுள்ளார்.. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இது குறித்து தனது தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது உங்களுக்காக உதயநிதி அண்ணா.. நான் கேரளாவில் இருந்து வந்தபோது உங்களது ரெட் ஜெயன்ட் அலுவலகத்தில் அமர்ந்து உங்களை அரசியலுக்கு வருமாறு அழைத்தேன். அப்போது உங்களிடம் கலைஞர் மற்றும் இரும்பு பெண்மணி ஜெயலலிதா ஆகியோரின் கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடியுங்கள் என கேட்டிருந்தேன். இப்போது அதே போல கேப்டன் விஜயகாந்தை கொன்றவர்களையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் இந்த விஷயத்தை ஒதுக்கினால் அவர்கள் ஏற்கனவே ஸ்டாலின் சாரையும் மற்றும் கமல் சாரையும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கொல்ல முயற்சித்தனர். நீங்கள் இந்த கொலைகாரர்களை பின்தொடர்ந்து இப்போது செல்லவில்லை என்றால் அவர்களது அடுத்த டார்கெட் நீங்கள் அல்லது ஸ்டாலின் தான்.
நேரம் படம் வெளியான சமயத்தில் நீங்கள் எனக்கு ஒரு கிப்ட் பரிசளித்தீர்கள்.. ஞாபகம் இருக்கிறதா ? நீங்கள் ஒரு ஐபோன் சென்டருக்கு போன் செய்து 15 நிமிடத்திலேயே ஒரு கருப்பு நிற ஐபோனை வரவழைத்து எனக்கு கொடுத்தீர்கள். நீங்கள் அதை நினைவில் வைத்து இருப்பீர்கள் என நம்புகிறேன் உதயநிதி அண்ணா.. அதேபோல இந்த கொலைகாரர்களையும் அவர்களின் நோக்கம் என்ன என்பதையும் உங்களால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்” என்று கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
சமீப காலமாக அவ்வப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக சில கருத்துக்களை அல்போன்ஸ் புத்ரன் கூறி வருகிறார் என்றாலும் இப்படி தலைவர்களின் மரணங்களில் சந்தேகம் கிளப்பி ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, எதற்காக இப்படி ஒரு பதிவிட்டுள்ளார் என்கிற குழப்பத்தையே பலரிடமும் ஏற்படுத்தி உள்ளது.