எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
மறைந்த நடிகரும், தேமுதிக., தவைலருமான விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதும் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார். இன்று(டிச., 29) தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி. தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பொருத்தமான ‛கேப்டன்' பெயர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நடிகர் விஜயகாந்த்தை இழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு முறை விஜயகாந்த் உடன் பழகினால் அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். நட்புக்கு இலக்கணமானவர். கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது. சினிமாகாரர்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது. நான் மருத்துவமனையில் இருந்தபோது தொந்தரவாக இருந்த கூட்டத்தை 5 நிமிடத்தில் விரட்டி அடித்தவர் விஜயகாந்த். மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கியபோது களத்தில் இறங்கி என்னை பூ போல் அங்கிருந்து கூட்டி வந்தவர் விஜயகாந்த். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் யார் என்றால் அது விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் : ‛‛அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மனவுறுதி கொண்ட மனிதர் அவர். எப்படியாவது உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு என அனைவரும் நினைத்தோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவர் சோர்வாக இருந்ததை பார்த்தபோது, எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது, வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்திருக்கிறோம்'' என்றார்.