'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படம் நாளை மறுநாள் டிசம்பர் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய அரசுகள் அறிவித்தன.
தெலங்கானாவில் இதுவரை இல்லாத அளவிற்கு டிக்கெட் கட்டணத்தை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு முதல் நாள் வசூலாக பெரும் தொகை வசூலாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட 'சலார்' படத்திற்கான கட்டண உயர்வு அதிகம் என்பதே இதற்குக் காரணம்.
ஆந்திராவில் சற்றே உயர்த்தப்பட்டிருந்தாலும் அங்கும் முதல் நாள் வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி என்பதால் தெலுங்கில் முதல் நாளில் 'சலார்' வசூல் சாதனை படைக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியிலும் படத்திற்கு இது போன்ற வரவேற்பு கிடைத்தால் இந்திய அளவில் சாதனை புரிய வாய்ப்புள்ளது.