ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

நடிகர் திலகம் சிவாஜியின் இளைய மகன் பிரபு. அவரும் சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். பிரபு - புனிதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளனர். விக்ரம் பிரபு தற்போது படங்களில் நடித்து வருகிறார். மகள் ஐஸ்வர்யாவை தனது சகோதரி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான ஐஸ்வர்யா கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்தியா திரும்பினார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பஹிரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியவர்.
இவர்கள் திருமணம் நாளை(டிச., 15) எளிய முறையில் நடக்கிறது. இதில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை குடும்பத்தினருடன் சென்று நேரில் அழைத்தார் பிரபு. அவருடன் மனைவி புனிதா, மகன் விக்ரம் பிரபு ஆகியோரும் சென்றனர்.