லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் மீசை, தாடி இல்லாமல் மிக இளமையான தோற்றத்தில் உள்ள போட்டோ வைரலாகி வருகிறது. இப்போது கிடைத்த தகவலின் படி, இந்த புதிய லுக் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் ராணுவ வீரர் பயிற்சி காலத்தில் உள்ள தோற்றம். இப்போது இதற்கான படப்பிடிப்பு தான் நடந்து வருவதாக கூறப்படுகிறது.