இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அந்த ரசிகர்களைக் கவர்ந்து கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் வகிதா ரகுமான், ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு தீபிகா படுகோனே பிரபலமானாலும் அவரால் கனவுக்கன்னி என்ற அளவிற்கெல்லாம் போக முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் இரண்டு தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். 'ஜவான்' படத்தில் அறிமுகமான நயன்தாரா, 'அனிமல்' படத்தில் நடித்த ராஷ்மிகா தான் அந்த இருவர். நயன்தாரா தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் ஹிந்தியில் இந்த வருடம்தான் அறிமுகமானார். ராஷ்மிகா மந்தனா இதற்கு முன்பு 'குட்பை, மிஷன் மஞ்சு' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் அவருக்குக் குறிப்பிடும்படியாக அமையவில்லை. ஆனால், 'அனிமல்' படம் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துவிட்டது.
நயன்தாரா, ராஷ்மிகா இருவரும் அடுத்து வேறு எந்த ஹிந்திப் படங்களிலும் நடிப்பதற்கு இதுவரை சம்மதிக்கவில்லை. நயன்தாரா தமிழ்ப் படங்களிலும், ராஷ்மிகா தெலுங்குப் படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள்.