'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமல்லாது அரசியல் குறித்தும் அடிக்கடி கிண்டல் செய்து பதிவுகளைப் போடுவார். குறிப்பாக தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண் ஆகியோரைக் கடுமையாக விமர்சிப்பார்.
நடைபெற்று முடிந்த தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை. இது தெலங்கானாவில் பவனின் அரசியல் வாழ்க்கைக்கு மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திர அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர் பவன் கல்யாண். அடுத்து நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, தெலங்கானா அரசியலில் படுதோல்வி அடைந்த பவன் கல்யாண் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்துள்ளார். “கணிதத்தில் ஆர்யபட்டா ஜீரோவைக் கண்டுபிடித்தார். அரசியலில் பவன் கல்யாண் ஜீரோவைக் கண்டுபிடித்துள்ளார்,” என பதிவிட்டுள்ளார். இதனால், அவர் மீது பவன் கல்யாண் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.