ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபலமாக வலம் வந்த சீனியர் நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை ரியூனியன் என்கிற பெயரில் ஒன்று கூடி அந்த சந்தோஷத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதை நடிகைகள் சுகாசினி, லிசி, ராதிகா உள்ளிட்டோர் மாற்றி மாற்றி எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் ரகுமானின் மகள் திருமணத்தின்போது இதேபோன்று எண்பதுகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இதில் நடிகைகள் சுகாசினி, ஷோபனா, ரேவதி, அம்பிகா, நதியா, மேனகா, பார்வதி, ஜெயஸ்ரீ மற்றும் நடிகர்கள் மோகன், பானு சந்தர், பாக்யராஜ், சுந்தர் சி, உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ரகுமானின் மைத்துனரான இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.