அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' |

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது அவரது ஒவ்வொரு படமும் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. பிரபாஸை ஒரு நல்ல நடிகராக செதுக்கியதில் அவரது நடிப்பு குருவான சத்யானந்த்திற்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தான் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜெயம் ரவி உள்ளிட்டோரையும் சினிமாவிற்குள் நுழைந்த சமயத்தில் நடிப்பிற்காக பட்டை தீட்டியவர்.
எப்போதுமே தனது குருவிற்கு உரிய மரியாதையை செலுத்தி வரும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து சத்யானத் பிறந்தநாளில் தவறாமல் அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது அவரை சந்தித்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, “இந்த கடிகாரத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடிகார செயின் கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொடுப்பதற்கு கடைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று சற்று விளையாட்டாகவும் கமெண்ட் அடித்துள்ளார்.