மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் |

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம், லியோ' படங்களில் பழைய பாடல்கள் சிலவற்றைப் பயன்படுத்தி அந்தப் பாடல்களை மீண்டும் ரசிகர்களைக் கேட்க வைத்தார்.
'விக்ரம்' படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் போது 'சக்கு சக்கு வத்திக்குச்சி' என்ற பாடல் இடம் பெற்றது. ஆதித்யன் இசையில் வெளிவந்த 'அசுரன்' படத்தில் இடம் பெற்ற பாடல் அது. 'விக்ரம்' படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றதும் அந்தப் பாடலை யு டியூபில் பார்த்து ரசித்தார்கள்.
அடுத்து 'லியோ' படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சியின் போது 'கரு கரு கருப்பாயி' என்ற பாடல் இடம் பெற்றது. தேவா இசையமைப்பில் வெளிவந்த 'ஏழையின் சிரிப்பில்' படத்தில் இடம் பெற்ற பாடல் அது. அந்தப் பாடலையும் ரசிகர்களை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய படத்தில்தான் அப்படி என்று பார்த்தால், இப்போது அவர் வெளியிட உள்ள 'பைட் கிளப்' படத்திலும் அப்படி ஒரு பழைய பாடலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவரது நண்பரான 'உறியடி' விஜயகுமார் நடித்துள்ள அப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதில் பழைய 'விக்ரம்' படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற 'எஞ்சோடி மஞ்சக்குருவி' என்ற பாடலை பின்னணி இசையாகப் பயன்படுததி இருக்கிறார்கள்.
'பைட் கிளப்' டீசரில் அந்த அதிரடியான பாடல் இடம் பெற்றுள்ளதால் டீசரை இன்னும் அதிகமாக ரசிக்க வைக்கிறது.