அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்க, மோகன் பாபுவே தயாரித்து வருகிறார். இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடும் விதமாக பல முன்னணி நட்சத்திரங்களையும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஏற்கனவே பிரபாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் இந்த படத்தில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில் நடிகர் மோகன்லால் தற்போது நியூசிலாந்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது போர்சனை நடித்து முடித்து கொடுத்துவிட்டு திரும்பி உள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.