நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படம் கடந்த வாரம் வெளியாகி இருக்க வேண்டியது. கடன் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 1ம் தேதி படம் வெளியாகலாம் என்று சொல்கிறார்கள்.
தன் படத்திற்கான பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைக்க கவுதம் மேனன் பழைய நண்பரான தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனை அழைத்துள்ளாராம். இப்படம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான போது அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் மதன். அதன்பின் சில காரணங்களால் விலகிவிட்டார்.
கவுதம் மேனன் இயக்கிய 'விண்ணைத் தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருநதவர் மதன். அவர் தற்போது தலையிட்டுள்ளதால் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பஞ்சாயத்து சீக்கிரமே முடிவடையும் என திரையுலகில் எதிர்பார்க்கிறார்கள்.
அவசர, அவசரமாக இந்த வாரம் டிசம்பர் 1ல் வருவதை விட, அனைத்தையும் தீர்த்துவிட்டு, முன்பதிவுக்கும் சரியான இடைவெளிவிட்டு, சில பல புரமோஷன்களைச் செய்த பின் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.