கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' |
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஆயிஷா. முன்னதாக தமிழில் திரைப்படங்கள், சீரியல்களில் நடித்திருந்தாலும் சத்யா தொடர் அவருக்கு நல்லதொரு பிரேக்கை தந்தது. அதன்பிறகு பிக்பாஸிலும் என்ட்ரி கொடுத்து கலக்கிய ஆயிஷா வெளியே வந்த கையோடு தனது காதலரை அறிமுகப்படுத்தினார். இருவருக்கும் விரைவில் திருமணமாக இருந்த நிலையில் அதுவும் தள்ளிப்போவதாக தெரிகிறது.
இந்நிலையில், நீண்ட நாட்களாக எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டாகாமல் இருந்த ஆயிஷா தற்போது சின்னத்திரையில் மீண்டும் சீரியலில் கமிட்டாகியுள்ளார். ஆனால், இம்முறை தமிழில் இல்லை. தெலுங்கில் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் ஆயிஷா நடிக்க உள்ளார்.