நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பொதுவாக வெப் தொடர்களில் பாடல்கள் இடம்பெறுவதில்லை. பின்னணி இசைக்கே முக்கியத்துவம் இருக்கும். சில தொடர்களில் ஒன்றிரண்டு பாடல்கள் இடம்பெறும். இசை மற்றும் நடனத்தை மையமாக கொண்டு வெளிவரும் தொடர்களில் அதிக பாடல்கள் இருக்கும். ஆனால் முதன் முறையாக தமிழில் தயாராகி உள்ள 'தி வில்லேஜ்' வெப் தொடரில் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல்களை மதுரை சியான் சாஹீர், செந்தில் குமார், ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். மகாளிமுத்து, சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா, குரு அய்யாதுரை, சியான், செந்தில் குமார், ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர். 11 பாடல்களை கொண்ட ஆடியோ ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
இந்த தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என்.சன்னி, முத்துக்குமார், கே.கலைராணி, ஜான் கொக்கைன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் நடித்துள்ளனர். வருகிற 24ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.