ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மனோஜ். சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் வளர்ந்த இவர் பின்பு மாடலிங் துறையில் நுழைந்து தற்போது மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையாகி இருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த 'பரகாசன் பராகட்டே' என்ற படத்தில் அறிமுமான இவர் அதன்பிறகு 'நாயாடி' படத்தில் நடித்தார். தற்போது 'ஜோ' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ரியோ ராஜ் ஜோடியாக நடிக்கிறார்.
கேரளா, தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ஒரு கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக உருவாகிறது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞனாக ரியோ ராஜும், கேரளாவை சேர்ந்த பெண்ணாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். இருவர் காதலுக்கு வரும் பிரச்னைகளும், தீர்வுகளும் தான் படத்தின் கதை.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அன்புதாசன், ஏகன், பவ்யா திரிக்கா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராம் இயக்கி உள்ளார். ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் வைசாக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள 'ஒரே கனா' பாடலில் யுவன் ஷங்கர் ராஜா நடித்துள்ளார். வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.